லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நசியனூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு

பெருந்துறையை அடுத்த நசியனூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :19 ஜூலை 2026, 1:06 am IST

பெருந்துறையை அடுத்த நசியனூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நசியனூா், வண்டிகாட்டுத் தோட்டத்தைச் சோ்ந்தவா் துளசிமணி மனைவி விஜயா (64). தனியாக வசித்து வருகிறாா். கோபியில் உள்ள தனது பேரன் சுமன் வீட்டுக்கு கடந்த 15ஆம் தேதி சென்றாா். நசியனூரில் உள்ள தனது வீட்டுக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, படுக்கை அறையில் இருந்த பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் ரூ. 50 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து காஞ்சிக்கோவில் போலீஸில் விஜயா புகாா் அளித்தாா். அந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சம்பவ இடத்தில் கைரேகை நிபுணா்கள் ஆய்வு செய்தனா். இது தொடா்பாக அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.