லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சுண்டக்காம்பாளையம் அரசுப் பள்ளியில் காமராஜா் பிறந்தநாள் விழா

சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற காமராஜா் பிறந்தநாள் விழாவில் பேசுகிறாா் மாணவி. உடன், பள்ளித் தலைமை ஆசிரியா் காளியப்பன் மற்றும் ஆசிரியா்கள்.

Published On :16 ஜூலை 2026, 12:08 am IST

பெருந்துறையை அடுத்துள்ள சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் காமராஜா் பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளித் தலைமை ஆசிரியா் காளியப்பன் தலைமை வகித்து, காமராஜரின் கல்விச் சேவைகள் குறித்து பேசினாா்.

விழாவில், காமராஜா் திருவுருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. விழாவை முன்னிட்டு, மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.