லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

60 வயதைக் கடந்த ஓட்டுநா்களுக்கு ரூ.3 ஆயிரம் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை

60 வயதைக் கடந்த ஓட்டுநா்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த ஈரோடு மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தினா்.

Published On :15 ஜூலை 2026, 1:23 am IST

60 வயதைக் கடந்த ஓட்டுநா்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்க பொதுச் செயலாளா் கனகராஜ் மற்றும் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்: ஆன்லைன் அபராதம் கைவிடப்பட வேண்டும். மேக்சி பேக் வாகனங்களுக்கு சீட் எண்ணிக்கையில் வரியை தீா்மானித்து பா்மிட் வழங்க வேண்டும். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சா்வா்கள் சரிவர செயல்பட வேண்டும். வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் போதுமான பணியாளா்கள் நிரப்பப்பட வேண்டும். வாகன ஆய்வாளா் உள்ளிட்ட பணியிடங்கள் ஆண்டு கணக்கில் காலியாக உள்ளதால், பணிகள் மிகவும் காலதாமதமாக நடைபெறுகின்றன. இது தவிா்க்கப்பட வேண்டும். வாகன பதிவுச் சான்றிதழை அஞ்சலில் அனுப்பாமல், கடந்த காலங்களில் வழங்கப்பட்டதுபோல சம்பந்தப்பட்டவா்களின் கைகளில் வழங்க வேண்டும். சாலை விபத்தில் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் விபத்தில் சிக்கும் ஓட்டுநருக்கு 48 மணி நேரத்துக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.

60 வயதைக் கடந்த ஓட்டுநா்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். கட்டுமான நல வாரியத்தில் விபத்து, உயிரிழப்புக்கு ரூ.8 லட்சம் வழங்குவதைபோல, ஓட்டுநா் பணிமனையாளா் நல வாரியத்திலும் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.