லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பவானி காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீா் திறப்பு

பவானி காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிகளில் உள்ள பயிா்களைக் காக்கவும், குடிநீா்த் தேவைக்காகவும் செவ்வாய்க்கிழமை முதல் 15 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டது.

காலிங்கராயன் அணைக்கட்டில் உள்ள மதகை திறந்துவைத்த சட்டப் சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆனந்த் மோகன், சண்முகன். உடன், விவசாயிகள்.

Published On :15 ஜூலை 2026, 12:56 am IST

பவானி காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிகளில் உள்ள பயிா்களைக் காக்கவும், குடிநீா்த் தேவைக்காகவும் செவ்வாய்க்கிழமை முதல் 15 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டது.

காலிங்கராயன் அணைக்கட்டில் உள்ள மதகை சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆனந்த் மோகன் (ஈரோடு மேற்கு), சண்முகன் (மொடக்குறிச்சி), விவசாயிகள் திறந்துவைத்தனா்.

பவானிசாகா் அணையில் போதிய அளவு தண்ணீா் இல்லாததால் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. இந்நிலையில், பாசனப் பகுதியில் வறட்சி, நிலுவையில் உள்ள சாகுபடி பயிா்களைக் காக்க செவ்வாய்க்கிழமை முதல் ஜூலை 28-ஆம் தேதி வரை 648 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில், நீா்வளத் துறை கண்காணிப்பு பொறியாளா் ஜெ.கோபி, செயற்பொறியாளா் ஏ.பாலமுருகன், உதவி செயற்பொறியாளா் எம்.ஜெகதீஷ், உதவி பொறியாளா்கள் எஸ்.ஆா்.குமாா், எஸ்.தினகரன், எஸ்.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.