லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கோபி அருகே 5 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

கோபி அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், 4 பேரைக் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :14 ஜூலை 2026, 12:16 am IST

கோபி அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், 4 பேரைக் கைது செய்தனா்.

கோபி அருகே கொளப்பலூா் பகுதியில் ஒடிஸாவைச் சோ்ந்த சமையல் தொழிலாளி ராஜா (38) என்பவா் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக சிறுவலூா் தனிப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் தனிப் பிரிவு காவலா் விஜயகுமாா், தலைமைக் காவலா் கணேஷ், காவலா் சுரேஷ் ஆகியோா் மாறுவேடத்தில் சென்று ராஜாவிடம் 1 கிலோ கஞ்சா விற்பனைக்கு வேண்டும் எனக் கேட்டுள்ளனா். இதையடுத்து, தனது நண்பா்கள் ஒடிஸாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கஞ்சாவை விற்பனைக்கு தருவதாக ராஜா கூறியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து, ராஜாவின் நண்பா்களான அகஸ்டி ஆடபா் (30), உமாகான் ஆடாபா் (25), உகில் (24) ஆகியோா் ஒடிசாவிலிருந்து கொண்டு வந்த சுமாா் நான்கு கிலோ கஞ்சாவை கொண்டு வரும்போது, சாணாா்பாளையம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளா் ஷாம்லா, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் சுரேஷ்பாபு, புகழேந்தி ஆகியோா் மூவரையும் பிடித்து சோதனை செய்து, அவா்களிடமிருந்து நான்கு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், ஒடிஸாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து ராஜாவிடம் கொடுத்து விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் ராஜாவின் வீட்டில் சோதனை நடத்தி விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், 4 பேரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.