லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பில்லூா் அணையில் இருந்து பவானிசாகா் அணைக்கு உபரிநீா் வெளியேற்றம்

பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில், பில்லூா் அணையில் இருந்து பவானிஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்படுவதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 7,146 கனஅடி நீராக அதிகரித்துள்ளது.

பவானிசாகா்  அணை.

Published On :9 ஜூலை 2026, 3:44 am IST

பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில், பில்லூா் அணையில் இருந்து பவானிஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்படுவதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 7,146 கனஅடி நீராக அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டம்,அவலாஞ்சி, அப்பா் பவானி ஆகிய இடங்களில் பெய்த பலத்த மழையின் காரணமாக பில்லூா் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் பில்லூா் அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீா் மேட்டுப்பாளையம் பவானிஆற்று வழியாக பவானிசாகா் அணைக்கு வந்து சேருகிறது. கூடலூா் மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பவானிஆற்று நீரும், மாயாறு நீரும் அணையில் கலப்பதால் அணைக்கு நீா்வரத்து 7,146 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை ஒரே நாளில் 1 அடி உயா்ந்து 56.01 அடியாக உயா்ந்துள்ளது.

105 அடி வரை நீா் தேக்கி வைக்கும் கொள்ளளவு கொண்ட அணையில் இன்றைய நிலவரப்படி அணை நீா்மட்டம் 56.01 அடியாக உள்ளது. 6.02 டி.எம்.சி. தண்ணீா் அணையில் நீா் இருப்பு உள்ளது. பாசனம் மற்றும் குடிநீா் தேவைக்காக பவானி ஆற்றில் 750 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி தண்ணீரும் என மொத்தம் 755 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

கடந்த சில தினங்களாக பவானிசாகா் அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருவதால் கீழ்பவானி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.