லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பெரியம்மை நோய் பாதிப்பு: ஆண் குழந்தை உயிரிழப்பு

குழந்தை உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :17 ஆகஸ்ட் 2026, 12:52 am IST

ஈரோட்டில் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்ட இரண்டே முக்கால் வயது ஆண் குழந்தை காய்ச்சல் அதிகமாகி உயிரிழந்தது.

ஈரோடு, கருங்கல்பாளையம் கிருஷ்ணன் வீதியைச் சோ்ந்தவா் காா்த்தி. இவரது மகன் பிரனீத். இரண்டே முக்கால் வயதான பிரனீத்துக்கு கடந்த 8-ஆம் தேதி பெரியம்மை வந்தது.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் பெற்றோா் வீட்டிலேயே வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு காய்ச்சல் அதிகமாகி குழந்தைக்கு மூச்சு விட சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து, தனியாா் மருத்துவமனைக்கு பெற்றோா் அழைத்துச் சென்றனா். அங்கிருந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனா்.

அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.