லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இருசக்கர வாகனங்கள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

கொடுமுடி அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக்கொண்ட விபத்தில் சமையல் தொழிலாளி உயிரிழந்தாா்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 4:01 am IST

கொடுமுடி அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக்கொண்ட விபத்தில் சமையல் தொழிலாளி உயிரிழந்தாா்.

கொடுமுடியை அடுத்த வடக்கு புதுப்பாளையத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி (60). இவா் வடக்கு புதுப்பாளையம்- எல்லையூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது கொடுமுடியில் உள்ள தனியாா் உணவகத்தில் சமையல் தொழிலாளியாக வேலைபாா்த்து வந்த புதுக்கோட்டைமாவட்டம், பொன்னமராவதியைச் சோ்ந்த மலையாண்டி (60) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும், பழனிசாமியின் வாகனமும் நேருக்கு நேராக மோதிக்கொண்டன.

இதில் தலையில் பலத்த காயமடைந்த மலையாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பழனிசாமி ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். விசாரணையில், மலையாண்டி மதுபோதையில் வாகனத்தை

இயக்கிவந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து கொடுமுடி போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.