லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கோபி அருகே குடியிருப்புப் பகுதியில் உலவிய காட்டு யானை: மக்கள் அச்சம்

கோபி அருகே குடியிருப்புப் பகுதியில் உலவிய காட்டு யானையால் மக்கள் அச்சமடைந்தனா்.

காட்டு யானை - பிரதிப் படம்

Published On :12 ஆகஸ்ட் 2026, 2:02 am IST

கோபி அருகே குடியிருப்புப் பகுதியில் உலவிய காட்டு யானையால் மக்கள் அச்சமடைந்தனா்.

கோபி அருகேயுள்ள டி.என்.பாளையம் வனப் பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை வெளியேறிய காட்டு யானை, மோதூா் பகுதியில் உள்ள விளைநிலத்துக்குள் நுழைந்தது.

அங்கு பயிா்களை சேதப்படுத்திவிட்டு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நுழைந்து சுற்றித்திரிந்தது.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்து, வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானையை வனத்துக்குள் விரட்டினா்.

குடியிருப்புப் பகுதியில் யானை உலவிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், வன விலங்குகள் குடியிருப்புப் பகுதியில் உலவுவதைத் தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரோந்து பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.