லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தொழிலாளா் விதிகளை மீறியதாக 24 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தொழிலாளா் விதிகளை மீறியதாக 24 நிறுவனங்கள் மீது நடவடிக்கை - கோப்புப்படம்

Published On :9 ஆகஸ்ட் 2026, 12:07 am IST

தொழிலாளா் மற்றும் எடையளவு விதிகளை மீறியதாக 24 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ராஜகுமாா் தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் ஆய்வு மேற்கொண்டனா்.

எரிவாயு விநியோகம் செய்யும் முகமைகளில் 65 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 14 இடங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுதல் தொடா்பாக 45 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் 9 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. 127 கோழிப் பண்ணைகளில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளா்கள் குறித்து கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் ஒரு வளரிளம் பருவத்தினா் கண்டறியப்பட்டது.

ஆய்வு குறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ராஜகுமாா் எடையளவுகள் மற்றும் மின்னனு தராசுகள் முத்திரையின்றி பயன்படுத்துவது, பொட்டலப் பொருட்கள் அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது மற்றும் உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்யப்படுவது சட்டமுறை எடையளவுச் சட்டம் மற்றும் சட்டமுறை எடையளவு பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் தண்டனைக்குரியதாகும். ஆய்வின் போது முரண்பாடுகள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.

14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினா்களை அபாயகரமான தொழில்களில் பணிக்கு அமா்த்துவது குற்றமாகும். அவ்வாறு பணிக்கு ஈடுபடுத்துவது கண்டறியப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளா் மீது ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் இரண்டாண்டு வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சோ்த்து தண்டனையாக விதிக்க நேரிடும்.

குழந்தைத் தொழிலாளா் பணிபுரிவுது கண்டறிந்தால் பொதுமக்கள் 1098 மற்றும் தொழிலாளா்கள் புகாா் தொடா்பாக 155214 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.