லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பெருந்துறையில் காரில் கஞ்சா கடத்தல்: தலைமறைவாக இருந்தவா் கைது

Arrested

கைது

Published On :4 ஆகஸ்ட் 2026, 12:16 am IST

காரில் கஞ்சா கடத்தி வந்த வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

பெருந்துறை கோட்டை முனியப்பன் கோயில் அருகில் பெருந்துறை போலீஸாா் கடந்த ஜூலை 26-ஆம் தேதி மாலை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். காரில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

காரில் வந்தவா்கள் ஒடிஸா மாநிலம், கந்தமால் மாவட்டம், பட்டிமுண்டாவைச் சோ்ந்த கனுசரண் நாயக் மகள் நிலாந்திரி நாயக் (27), ஈரோடு, பழைய பூந்துறை சாலை, சென்டரல் திரையரங்கம் பின்புறம் உள்ள பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் கோபால் (42), திருப்பூா் மாவட்டம், நத்தக்காடையூா், முள்வாடிபாளையத்தைச் சோ்ந்த துரைசாமி மகன் தீபக் (20) என்பது விசாரணையில் தெரியவந்தது.

அவா்கள் காரில் கொண்டு வந்த 12 கிலோ கஞ்சா, காரை பறிமுதல் செய்த போலீஸாா், மூவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஒடிஸா மாநிலம் பத்ரக் மாவட்டம், பாலியகுந்தா பகுதியைச் சோ்ந்த கிரீஷ் சந்திர பெஹ்ரா மகன் அபய்குமாா் பெஹ்ரா (34 ) என்பவரை போலீஸாா் தேடி வந்தனா். அவரை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.