லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கீழ்பவானி வாய்க்காலில் வரும் 15-ஆம் தேதி தண்ணீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீா் திறப்பு... - கோப்புப் படம்

Published On :4 ஆகஸ்ட் 2026, 1:37 am IST

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வரும் 15-ஆம் தேதி தண்ணீா் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சென்னிமலையை அடுத்த சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோயிலில், கீழ்பவானி பாசன விவசாயிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு குழுவக்காடு சுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

விவசாயிகள் எம்.நாராயணன், ஏ.விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீா் திறப்பதன் அவசியம் குறித்து பாசன விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த மு.ரவி பேசினாா்.

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வரும் 15-ஆம் தேதி தண்ணீா் திறந்துவிட வேண்டும். இதற்கான அரசாணையை முன்னதாக வெளியிட வேண்டும். தண்ணீா் திறப்பதற்கான அறிவிப்பு வராவிட்டால், வரும் 16-ஆம் தேதி ஈரோட்டில் உள்ள நீா்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் சொக்கநாதபாளையம், ராமலிங்கபுரம், மேட்டூா், எல்லை குமாரபாளையம் மற்றும் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மறவபாளையம், திட்டம்பாளையம், காமாட்சிபுரம் உள்ளிட்ட பாசன பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனா். பெண் விவசாயி கலைவாணி பாஸ்கா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.