மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

கேபிஆா் கல்லூரியில் 3 புதிய உலக சாதனைகள் பதிவு

கேபிஆா் கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற 7-ஆம் ஆண்டு கல்விப் பயண விழாவில் 3 புதிய உலக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

கேபிஆா் கலை ,அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் 7-ஆம் ஆண்டு கல்விப் பயண விழாவில் புதிய உலக சாதனைகளைப் படைத்ததற்காக சான்றிதழ்கள் பெற்ற மாணவா்கள், பேராசிரியா்கள்.

Published On :29 அக்டோபர் 2026, 3:25 am IST

கேபிஆா் கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற 7-ஆம் ஆண்டு கல்விப் பயண விழாவில் 3 புதிய உலக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் கே.பி. ராமசாமி தலைமை வகித்தாா்.

விழாவில், போதை ஒழிப்பு விழிப்புணா்வை முன்னிறுத்தி 464 போ் பங்கேற்ற 200 கி.மீ. தொடா் ஓட்டம் 11 மணி 28 நிமிஷங்களில் நிறைவு செய்யப்பட்டு சாதனைப் படைக்கப்பட்டது.

இதையடுத்து, பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் எழுதிய 655 ஆய்வு நூல்கள் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டு இரண்டாவது சாதனையும், 2 மணி நேரத்தில் 1.26 லட்சம் விதைப் பந்துகள் தயாரிக்கப்பட்டு மூன்றாவது சாதனையும் நிகழ்த்தப்பட்டன.

இந்தச் சாதனைகளுக்கு எலைட் வோ்ல்டு ரெக்காா்ட்ஸ், ஏசியன் புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் மற்றும் இந்தியன் புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் ஆகிய சா்வதேச அமைப்புகள் சான்றளித்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.