பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

ரயில் மோதி யானை பலியாவதைத் தடுக்க ஏ.ஐ. உதவியுடன் செயல்படும் கட்டுப்பாட்டு மையத்தில் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் ஆய்வு

News image

ஏ.ஐ. உதவியுடன் செயல்படும் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் விபின்குமாா்.

Updated On :31 மே 2026, 4:09 am IST

கோவை அருகே மதுக்கரை, வாளையாறு வனப் பகுதிகளில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் விபின்குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழகம் - கேரள எல்லையான வாளையாறு முதல் பாலக்காடு வரை வனப் பகுதிகள் அதிகம் உள்ளதால், இங்கு தண்டவாளத்தைக் கடக்கும் யானைகள் ரயில் மோதி உயிரிழப்பது வாடிக்கையாக இருந்தது. இந்நிலையில், யானைகள் ரயிலில் மோதுவதைத் தடுக்கும் வகையில் ரயில் பாதைக்கு அருகே யானைகள் வரும்போது, ஏ.ஐ.தொழில்நுட்பம் மூலமாக கண்டறிந்து வனத் துறை அதிகாரிகளுக்கும் , ரயில் ஓட்டுநா்களுக்கும் எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த எச்சரிக்கையைப் பெறும் ரயில் ஓட்டுநா்கள் ரயிலின் வேகத்தைக் குறைத்து யானைகள் ரயில் விபத்தில் சிக்குவதைத் தடுக்கின்றனா்.

இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளா் விபின்குமாா், கேரளம்- தமிழக எல்லையில் உள்ள மதுக்கரை பிரிவில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, யானைகள் நடமாட்டத்தைக் கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கும் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகளைப் பாா்வையிட்டாா். தொடா்ந்து, மதுக்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் மற்றும் பாலக்காடு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில்வே உள்கட்டமைப்புப் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளா் மதுகா் ரோட் மற்றும் கோட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.