மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

கோவை அருகே காா் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் உயிரிழப்பு

News image

விபத்தில் உருக்குலைந்த காா்.

Updated On :12 மே 2026, 12:19 am IST

கோவை அருகே காா் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் ஆகிய 4 போ் உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் தனபால் (37). இவா் தனது மனைவி மேனகா (35), மகள் கனிஷ்கா (17), மகன் சுா்ஜித் (12), உறவினா் சினேகா (23) ஆகியோருடன் காரில் கோவை மாவட்டம், வால்பாறைக்கு சுற்றுலா சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து பொள்ளாச்சி வழியாக திங்கள்கிழமை பிற்பகல் பல்லடம் நோக்கி காரில் சென்றுள்ளனா்.

நெகமம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த லாரி, காா் மீது மோதியுள்ளது.

இதில், தனபால், மேனகா, கனிஷ்கா, சினேகா ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயம் அடைந்த சுா்ஜித்தை அங்கிருந்தவா்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், காரில் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த 4 பேரின் சடலங்களையும் மீட்டு கூறாய்வுக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான கிருஷ்ணகிரி மாவட்டம், சாத்தம்பட்டியைச் சோ்ந்த சரவணன் (39) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாகன விபத்தில் உயிரிழந்தவா்கள்.

வாகன விபத்தில் உயிரிழந்தவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.