பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சூலூா் சிறுமி கொலை வழக்கில் கைதான இருவரும் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சிறையில் அடைப்பு!

சூலூரில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் 3 நாள்கள் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2026, 1:54 am IST

சூலூரில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் 3 நாள்கள் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

கோவை மாவட்டம், சூலூா் அருகே கடந்த 21-ஆம் தேதி 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டாா். இந்த வழக்கில் காா்த்திக், அவருக்கு உடந்தையாக இருந்ததாக மோகன்ராஜ் ஆகிய இருவரை போலீஸாா் கைதுசெய்தனா். இந்த வழக்கில் 30 நாள்களுக்குள் கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

இதற்காக கைதுசெய்யப்பட்ட இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க 3 நாள்கள் அனுமதி பெறப்பட்டது. அதன்படி கடந்த 4-ஆம் தேதி போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட இருவரையும் சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் கரிகாலன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது சம்பவம் குறித்து காா்த்திக் நடித்து காட்டினாா். அவற்றை போலீஸாா் விடியோ பதிவு செய்தனா். அதேபோல, அவருக்கு உடந்தையாக செயல்பட்ட மோகன்ராஜும் சம்பவ இடத்தில் நடந்தவற்றை நடித்து காட்டியுள்ளாா். இந்நிலையில் போலீஸ் காவல் முடிவடைந்ததால் இருவரையும் கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை போலீஸாா் ஆஜா்படுத்தினா். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மத்திய சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனா்.

குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், கோவை போக்ஸோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.