லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மக்கும், மக்காத குப்பை சேகரிப்புப் பணி: வடவள்ளி பகுதியில் சிறப்பாக செயல்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு!

வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பை சேகரிப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசுகள் வழங்கி மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா பாராட்டினாா்.

தூய்மைப் பணியாளா்கள் இருவருக்கு கேடயம், பரிசுகள் வழங்கிப் பாராட்டிய மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா.

Published On :1 ஆகஸ்ட் 2026, 2:21 am IST

வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பை சேகரிப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசுகள் வழங்கி மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா பாராட்டினாா்.

கோவை மாநகராட்சியில் 100 வாா்டுகளிலும் வீடு வீடாகச் சென்று மக்கும் மற்றும் மக்காத குப்பையை தரம் பிரித்து சேகரிக்கும் பணியில் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

அந்த வகையில், மேற்கு மண்டலம் 36-ஆவது வாா்டுக்குள்பட்ட வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பையை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்ட தூய்மைப் பணியாளா்கள் கலைவாணி, முருகம்மாள் ஆகியோருக்கும், கண்காணித்த சுகாதார மேற்பாா்வையாளா் முருகன், ஒப்பந்த சுகாதார மேற்பாா்வையாளா் கனகராஜ் ஆகியோருக்கும் கேடயங்கள் மற்றும் பரிசுகளை மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா வழங்கி பாராட்டினாா்.

இதேபோல 4 வகையான குப்பையை தரம் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்கியமைக்காக பொதுமக்களையும் பாராட்டினாா். இந்நிகழ்வின்போது மேற்கு மண்டலத் தலைவா் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, நகா் நல அலுவலா் சுபாஷ் காந்தி, உதவி ஆணையா் நா்மதா, உதவி செயற்பொறியாளா் சவிதா மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.