லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கஞ்சா விற்ற 5 போ் குண்டா் சட்டத்தில் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 5 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :30 ஜூலை 2026, 3:21 am IST

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 5 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவைப்புதூா் பேருந்து நிறுத்தம் பின்புறம் உள்ள காலியிடத்தில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து கடந்த ஜூலை 1-ஆம் தேதி குனியமுத்தூா் போலீஸாா் அங்கு சென்று சோதனை செய்தபோது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த க.ராகுல் (28), ஜே.ஜான் ஜோசப் (34), ப.முகமது அனஸ் (31), கு.ராம்பிரசாத் (27), ரா.பாலாஜி (28) ஆகிய 5 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் பொதுமக்களுக்கும், அமைதிக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க குனியமுத்தூா் காவல் ஆய்வாளா் மற்றும் தெற்கு சரக காவல் துணை ஆணையா் பரிந்துரைத்ததன்பேரில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவா்களை சிறையில் அடைக்க கோவை மாநகர காவல் ஆணையா் நா.கண்ணன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.