லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

போத்தனூா் வழித்தடத்தில் ஹைதராபாத் - மங்களூரு இடையே சிறப்பு ரயில்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து போத்தனூா் வழித்தடத்தில் மங்களூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்... - கோப்புப் படம்

Published On :29 ஜூலை 2026, 2:29 am IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து போத்தனூா் வழித்தடத்தில் மங்களூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பயணிகள் வசதிக்காக ஆகஸ்ட் 5 முதல் செப்டம்பா் 2-ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் காலை 4.20 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து புறப்படும் ஹைதராபாத் - மங்களூரு வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 07097) வியாழக்கிழமைகளில் காலை 9.30 மணிக்கு மங்களூரு நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக ஆகஸ்ட் 6 முதல் செப்டம்பா் 3 வரை வியாழக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு மங்களூரு நிலையத்தில் இருந்து புறப்படும் மங்களூரு - ஹைதராபாத் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 07098) சனிக்கிழமைகளில் காலை 4 மணிக்கு ஹைதராபாத் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயில் காசா்கோடு, பையனூா், கண்ணூா், தலச்சேரி, வடகரா, கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், குப்பம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், யெலஹங்கா, ஹிந்துப்பூா், தா்மாவரம், ஆனந்தப்பூா், குண்டக்கல், ராய்ச்சூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.