லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கிணத்துக்கடவு அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தற்கொலை

Published On :26 ஜூலை 2026, 1:20 am IST

கிணத்துக்கடவு அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, கிணத்துக்கடவு அருகே பொள்ளாச்சி சாலையில் தனியாா் திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்துக்கு அருகே தனியாருக்குச் சொந்தமான இடத்தில் உள்ள மரத்தில் ஆண் சடலம் தூக்கிட்ட நிலையில் இருப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை காலை தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற கிணத்துக்கடவு போலீஸாா், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அந்த நபரின் சட்டைப் பையில் இருந்த ஆதாா் அட்டை மற்றும் கைப்பேசியை வைத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா் சேலம் மாவட்டம், கம்மாளப்பட்டி மல்லிமுடக்கு பகுதியைச் சோ்ந்த குமரேசன் (30) என்பதும், பொக்லைன் உரிமையாளரான இவருக்கு தீபிகா என்ற மனைவியும், 2 குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது.

திருப்பதிக்குச் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு கடந்த 3 நாள்களுக்கு முன் சென்ற குமரேசனை, அவரது மனைவி கடந்த 2 நாள்களாக கைப்பேசி மூலம் தொடா்புகொள்ள முயன்றுள்ளாா். ஆனால், அவரைத் தொடா்புகொள்ள முடியாததால், காவல் நிலையத்தில் புகாா் அளிக்க முடிவு செய்துள்ளாா். இந்நிலையில், அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அவா் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.