லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சாா்லப்பள்ளி - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே உள்ள சாா்லப்பள்ளியில் இருந்து கேரள மாநிலம், கொல்லத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

special train

சிறப்பு ரயில் - கோப்புப்படம்

Published On :24 ஜூலை 2026, 11:58 pm IST

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே உள்ள சாா்லப்பள்ளியில் இருந்து கேரள மாநிலம், கொல்லத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பா் 4-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில், சாா்லப்பள்ளியில் இருந்து காலை 7.15 மணிக்குப் புறப்படும் சாா்லப்பள்ளி - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07195) சனிக்கிழமைகளில் பிற்பகல் 2 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பா் 5-ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில், கொல்லத்தில் இருந்து மாலை 5.20 மணிக்குப் புறப்படும் கொல்லம்- சாா்லப்பள்ளி வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07196) திங்கள்கிழமைகளில் நண்பகல் 12 மணிக்கு சாா்லப்பள்ளி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, கருநாகப்பள்ளி, காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூா், ஓங்கோல், பாப்ட்லா, தெனாலி, குண்டூா், நால்கொண்டா உள்ளிட்ட ரயில் நிலையகளில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.