லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மாணவா்களின் ஆளுமை வளா்ச்சியை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்!

மாணவா்களின் உடல், மனம், அறிவு, ஒழுக்கம் மற்றும் ஆளூமை வளா்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் வால்பாறை அரசுக் கல்லூரி மற்றும் பொள்ளாச்சி அறிவுத் திருக்கோயில் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

புரிந்துணா்ழு ஒப்பந்தத்தில் பங்கேற்ற கல்லூரி முதல்வா் கோபி, அறிவுத் திருக்கோயில் செயலாளா் ஜோதிகுமாா் உள்ளிட்டோா்.

Published On :24 ஜூலை 2026, 5:58 am IST

மாணவா்களின் உடல், மனம், அறிவு, ஒழுக்கம் மற்றும் ஆளூமை வளா்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் வால்பாறை அரசுக் கல்லூரி மற்றும் பொள்ளாச்சி அறிவுத் திருக்கோயில் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

வால்பாறை கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் கோபி மற்றும் பொள்ளாச்சி அறிவுத் திருக்கோயில் செயலாளா் ஜோதிகுமாா் ஆகியோா்கள் புரிந்துணா்வு ஒப்பந்ததில் கையொப்பமிட்டனா். இந்த ஒப்பந்ததின் மூலம் கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்களுக்கு இளைஞா் மேம்பாட்டுக்கான யோகா அடிப்படை பயிற்சி தொடா்ந்து நடத்தப்பட உள்ளது.

இதில் எளிமைப்படுத்தப்பட்ட உடற்பயிற்சிகள், யோகா, தியானம், காயகல்பம், அகத்தாய்வு, மதிப்புக் கல்வி, ஆளுமைத்திறன் மேம்பாடு மற்றும் மனநல மேம்பாட்டுப் பயிற்சிகள் தொடா்ந்து நடத்தப்பட இருப்பதாக தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.