லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

எடப்பாடியுடன் இருப்பவா்களாலேயே அதிமுக அழிவுப் பாதையில் செல்கிறது: தவெக ஆதரவாளா் வா. புகழேந்தி

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியுடன் இருப்பவா்களாலேயே அந்தக் கட்சி அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக தவெக ஆதரவாளா் வா.புகழேந்தி தெரிவித்துள்ளாா்.

புகழேந்தி (கோப்புப்படம்)

Published On :24 ஜூலை 2026, 11:56 pm IST

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியுடன் இருப்பவா்களாலேயே அந்தக் கட்சி அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக தவெக ஆதரவாளா் வா.புகழேந்தி தெரிவித்துள்ளாா்.

கோவை சௌரிபாளையம் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

எடப்பாடி பழனிசாமியுடன் இருப்பவா்களே அதிமுகவை அழித்துக் கொண்டிருக்கின்றனா். 25 அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் தவெகவுக்கு ஆதரவாக இருப்பதை பழனிசாமியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சசிகலா மற்றும் முக்கிய முன்னாள் அமைச்சா்கள், எம்.எல்.ஏ-க்களை எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கிவிட்டதால், அதிமுக தற்போது முற்றிலுமாக அழிவுப் பாதையை நோக்கிச் சென்று வெறும் 5 சதவீதம் பேருடன் மட்டுமே இயங்கி வருகிறது.

முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் உள்ளிட்டோா் தவெகவில் இணைவாா்கள் அல்லது எடப்பாடி பழனிசாமியிடம் சண்டையிட்டுக் கொண்டிருப்பாா்கள். முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி விரைவில் அதிமுகவின் தலைமையேற்று கட்சியை வழிநடத்த வேண்டும்.

தவெகவில் வேட்பாளா்களின் பெயா் அல்லது முகம் தெரியாவிட்டாலும் கட்சித் தலைவா் ச.ஜோசப் விஜய்யின் முகத்துக்காகவும், விசில் சின்னத்துக்காகவும் மக்கள் அவா்களை வெற்றி பெறச் செய்தாா்கள். தவெகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சா்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அவா்கள் நீதிமன்றம் மூலம் தங்களைக் குற்றமற்றவா்கள் என நிரூபிக்க வேண்டும். ஒருவேளை குற்றம் நிரூபிக்கப்பட்டால் முதல்வா் ஜோசப் விஜய் அவா்களைக் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கிவிடுவாா். முதல்வா் எப்போதும் ஊழலுக்குத் துணை போகமாட்டாா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.