லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இளம்பெண்ணிடம் அத்துமீறல்: காவலா் பணியிடை நீக்கம்

Six cops suspended after gelatin sticks found during PM Modi’s route in Bengaluru

பணியிடை நீக்கம்.

Published On :20 ஜூலை 2026, 2:24 am IST

கோவையில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கைதான காவலா் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கோவை, துடியலூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வெள்ளக்கிணறு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே இளம்பெண் ஒருவா் தனது ஆண் நண்பருடன் நின்று கடந்த 15-ஆம் தேதி மாலை 6 மணியளவில் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த துடியலூா் காவல் நிலைய இரண்டாம் நிலைக் காவலா் எஸ்.வினோத்குமாா், அவா்களிடம் விசாரணை நடத்தியுள்ளாா்.

பின்னா், தனியாக விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி அந்தப் பெண்ணை தனியிடத்துக்கு அழைத்துச் சென்ற அவா், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த துடியலூா் போலீஸாா், தலைமறைவான காவலா் வினோத்குமாரை சனிக்கிழமை கைது செய்தனா்.

இந்நிலையில், காவலா் வினோத்குமாரை பணியிடை நீக்கம் செய்து கோவை மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.