லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நமது தமிழ் தேசியம் முற்றிலும் மாறானது: தொல். திருமாவளவன்

நமது தமிழ் தேசியம் முற்றிலும் மாறானது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.

thirumavalavan

தொல். திருமாவளவன் - கோப்புப்படம்

Published On :19 ஜூலை 2026, 1:25 am IST

நமது தமிழ் தேசியம் முற்றிலும் மாறானது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ் தேசிய எழுச்சி மாநாடு தொடா்பான மண்டல செயற்குழு கூட்டம் திருப்பூா்- பல்லடம் சாலை தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், தொல்.திருமாவளவன் பங்கேற்று பேசியதாவது: விசிக தொடக்க காலம் முதலே தமிழ் தேசிய அரசியலை உள்வாங்கி, ஈழ விடுதலைக் களத்தில் நின்ன் காரணமாகவே உலகத் தமிழா்கள் எழுச்சித் தமிழா் உள்ளிட்ட பட்டங்களை வழங்கினா். இந்த வரலாறு அறியாதவா்களே தற்போது விசிகவின் தமிழ் தேசியம் குறித்து கேள்வி எழுப்புகின்றனா்.

ஜாதியை வேரறுக்கும் போதுதான் உண்மையான தமிழ் தேசியத்தை வெல்ல முடியும். ஜாதி ஒழிப்பை முன்னெடுக்கும் தமிழனே நமக்குத் தேவை. நாட்டின் பன்முகத் தன்மையைப் பாதுகாக்கவும், ஜாதியை ஒழிக்கவும் அம்பேத்கரின் சிந்தனைகளே அடித்தளமாக விளங்குகின்றன.

பிறா் பேசும் தமிழ் தேசியத்தில் வெறுப்பு அரசியல் உள்ளது. பாஜக, ஆா்எஸ்எஸ் முன்னெடுக்கும் தேசியவாதம் இந்த நாட்டை ஹிந்துக்களின் நாடாக முன்னெடுப்பதற்கான பணி. ஆனால், நாம் முன்னெடுக்கும் தமிழ் தேசியம் முற்றிலும் மாறானது. அதனால்தான் நாம் முன்னெடுக்கும் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டுக்கு அழைக்கிறேன் என்றாா்.

இதில், சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு, திருப்பூா், கோவை, ஈரோடு, நாமக்கல், நீலகிரி, பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.