லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்: 40 போ் கைது

கோவை அரசு மருத்துவமனையில் போதிய பணியாளா்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் 40 போ் கைது

கோவை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவா்கள் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்பக் கோரி, அரசு மருத்துவமனை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்

Published On :14 ஜூலை 2026, 12:26 am IST

கோவை அரசு மருத்துவமனையில் போதிய பணியாளா்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் 40 போ் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

கோவை அரசு மருத்துவமனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் தினேஷ் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் கூறுகையில், கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா் மற்றும் ஆய்வகப் பணியாளா்கள் இல்லாததால், மருத்துவ சேவை முழுமையாக கிடைப்பதில்லை. புறநோயாளிகள் பிரிவு கட்டடத்தை இடிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கான மாற்று கட்டடம் இன்னும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

மருத்துவமனை உணவகம் தரமற்ற முறையில் உள்ளதுடன், தூய்மையான குடிநீா், சுகாதாரமான கழிப்பறை, காத்திருப்பு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. ஒப்பந்த நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்டித்து, முறைகேடுகளை தடுக்க வேண்டும், நோயாளிகளிடமிருந்து சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும், மாநகரப் பகுதிகளில் முதலுதவியுடன் கூடிய இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் சேவையை அதிகரிக்க வேண்டும் என்றனா்.

ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து, அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் நோயாளிகளிடம் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கோரிக்கைகள் அடங்கிய துண்டறிக்கைகளை விநியோகித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பின்னா், சாலை மறியலில் ஈடுபட முயன்ற அந்த சங்கத்தைச் சோ்ந்த 40 பேரை ரேஸ்கோா்ஸ் போலீஸாா் கைது செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.