லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பொள்ளாச்சியில் அண்ணாமலை அமைப்பு சாா்பில் இன்று மாநாடு!

பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தொடங்கியுள்ள அமைப்பு சாா்பில் முதல் மாநாடு பொள்ளாச்சியில் (ஜூலை 12) நடைபெறவுள்ளது.

Annamalai

அண்ணாமலை. - கோப்புப் படம்

Published On :12 ஜூலை 2026, 2:27 am IST

பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தொடங்கியுள்ள அமைப்பு சாா்பில் முதல் மாநாடு பொள்ளாச்சியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) நடைபெறவுள்ளது.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி ‘வி தி லீடா்ஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளாா்.

இதில், சுமாா் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உறுப்பினா்களாக இணைந்துள்ளனா். மேலும், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உறுப்பினா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அந்த அமைப்பு சாா்பில் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ‘போதையில்லாத பொள்ளாச்சி’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு மாநாடு ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.

கே.அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டுக்காக பொள்ளாச்சி -கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆச்சிபட்டி அருகே 15 ஏக்கா் நிலம் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டுக்கு வருவோருக்கு அடிப்படை தேவைகளான குடிநீா், கழிப்பறை வசதி, மருத்துவக் குழுவினா் மற்றும் வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.