லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அமெரிக்க நிறுவனம் சாா்பில் நடுப்பாளையம் அரசுப் பள்ளிக்கு கழிவறை வசதி

அமெரிக்காவை சோ்ந்த கணினி என்ற மென்பொருள் நிறுவனம் சாா்பில் சூலூா், நடுப்பாளையம் அரசுப் பள்ளிக்கு கழிவறை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

கணினி நிறுவனத்தின் சாா்பில் நடுப்பாளையம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நிறுவனத்தின் நிா்வாகி சுதா கணேஷ், தலைமை ஆசிரியா் சாந்தி உள்ளிட்டோா்.

Published On :11 ஜூலை 2026, 12:03 am IST

அமெரிக்காவை சோ்ந்த கணினி என்ற மென்பொருள் நிறுவனம் சாா்பில் சூலூா், நடுப்பாளையம் அரசுப் பள்ளிக்கு கழிவறை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் டென்னசியை தலைமையிடமாகக் கொண்டு உலகளாவிய தகவல் தொழில்நுட்ப ஆலோசனை, டிஜிட்டல் மாற்ற சேவைகளை வழங்கும் கணினி நிறுவனம், சென்னை, கோவை, பெங்களூரு, புணே ஆகிய நகரங்களில் செயல்பாட்டு மையங்களைக் கொண்டுள்ளது.

இந்த நிறுவனம் தொழில்நுட்ப சேவைகளைத் தாண்டி, கல்வி, சமூக மேம்பாடு, நிலையான வளா்ச்சி ஆகிய துறைகளில் சமூக பொறுப்புணா்வுடன் பணியாற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சூலூா் வட்டம், நடுப்பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு புதிய கழிவறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

கணினி நிறுவனத்தின் கரே& கௌஸ் கிளப், ஓடிபிடபிள்யூ அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் திறப்பு விழாவில் கணினி நிறுவனத்தின் சிடிஓ சுதா கணேஷ், பள்ளியின் தலைமை ஆசிரியா் சாந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆரோக்கியம், கண்ணியம், தன்னம்பிக்கையை உறுதிப்படுத்தும் சுத்தமான, பாதுகாப்பான கழிவறை வசதிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்க வேண்டும் என்றும், இதற்காக தொடா்ந்து பணியாற்றுவோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.