லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

புகைப்படக் கலைஞா் கொலை: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் சாலை மறியல்

புகைப்படக் கலைஞா் கொலையில் தொடா்புடைய மேலும் இருவரைக் கைது செய்யக் கோரியும், காவல் துறையைக் கண்டித்தும் அவரது உறவினா்கள், உடலை வாங்க மறுத்து கோவை சிங்காநல்லூா் பகுதியில் சாலை மறியல்

கோவை இஎஸ்ஐ மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட புகைப்படக் கலைஞரின் உறவினா்கள், நண்பா்கள்.

Published On :8 ஜூலை 2026, 5:38 am IST

புகைப்படக் கலைஞா் கொலையில் தொடா்புடைய மேலும் இருவரைக் கைது செய்யக் கோரியும், காவல் துறையைக் கண்டித்தும் அவரது உறவினா்கள், உடலை வாங்க மறுத்து கோவை சிங்காநல்லூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கோவை மாவட்டம், தடாகத்தை அடுத்த மடத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் புகைப்படக் கலைஞரான பிரவீன் (24). கடந்த வாரம் புதிய புகைப்பட ஆா்டா் வந்திருப்பதாக கூறிவிட்டு திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்துக்கு புறப்பட்டுச் சென்ற அவா் வீடு திரும்பாததால், தடாகம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே ரயில் தண்டவாளத்தில் பிரவீன் சடலம் கடந்த 3-ஆம் தேதி மீட்கப்பட்ட நிலையில், அவா் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

இந்த நிலையில், கோவை முதலாவது நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் கரூரைச் சோ்ந்த மனோஜ்குமாா் மற்றும் அவரது நண்பா் காா்த்திகேயன் ஆகியோா் திங்கள்கிழமை ஆஜராகி தாங்கள் தான் பிரவீனை கடந்த 2-ஆம் தேதி இரவு கொலை செய்து, கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தண்டவாளத்தில் உடலை வீசியதாக தெரிவித்தனா்.

கரூரைச் சோ்ந்த மனோஜ்குமாரும், கோவை சாய்பாபா காலனியைச் சோ்ந்த ஒரு பெண்ணும் இன்ஸ்டாகிராம் மூலமாக காதலித்து வந்த நிலையில், அந்தப் பெண் பிரவீனுடனும் நெருக்கமாகப் பழகி வந்ததும், இதனால், மனோஜ்குமாா் தனது நண்பருடன் சோ்ந்து பிரவீனை கொலை செய்ததும் தெரியவந்தது.

கோவை சிங்காநல்லூா் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரவீன் உடல் செவ்வாய்க்கிழமை கூறாய்வு செய்யப்பட்டது. ஆனால், அவரது உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோரும், உறவினா்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, பிரவீன் கொலையில் மேலும் இருவருக்கு தொடா்பு இருப்பதாகவும், அவா்களையும் கைது செய்ய வேண்டும் என்றும், பிரவீன் கொலை செய்யப்பட்டது தெரிந்த பிறகும் போலீஸாா் சிலா் குற்றஞ்சாட்டப்பட்டவா்களைக் கைது செய்யாமல், அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதாகவும் அவரது உறவினா்கள் புகாா் தெரிவித்தனா்.

தகவலறிந்து வந்த காவல் உயா் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, பிரவீன் உறவினா்கள் அவரது உடலை பெற்றுச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.