லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜூலை 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் - (கோப்புப்படம்)

Published On :4 ஜூலை 2026, 1:39 am IST

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜூலை 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜூன் மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில், ஜூலை 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலியில் இருந்து ஜூலை 5 முதல் 26 -ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்குப் புறப்படும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06030) மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் நிலையத்தை வந்தடையும்.

மறுமாா்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஜூலை 6 முதல் 27-ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் இரவு 7.45 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06029) மறுநாள் காலை 8.05 மணிக்கு திருநெல்வேலி நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது கோவை, போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி, பாவூா்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.