லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கரைப்புதூா், கணபதிபாளையம் ஊராட்சிகளில் ஆய்வு

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கரைப்புதூா், கணபதிபாளையம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அருள்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

Published On :3 ஜூலை 2026, 3:46 am IST

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கரைப்புதூா், கணபதிபாளையம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் கூறியதாவது:

பல்லடம் ஊராட்சி ஒன்றியம், கரைப்புதூா் ஊராட்சி என்.எஸ்.கே. நகா் பகுதியில் வீடு, வீடாக குப்பை சேகரிக்கும் பணி, எம்ஜிஆா் நகா் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கு, ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுவரும் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி, பொன் நகரில் நுண்ணுயிா் உரமாக்கல் மையம், அல்லாளபுரத்தில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளி, கணபதிபாளையம் தொடக்கப் பள்ளிகளைப் பாா்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடா்ந்து கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், மளிகை பொருள்கள், காய்கறிகள் மற்றும் எரிவாயு இருப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்தும், மாணவா்களின் வருகைப் பதிவேடு, பாடப் புத்தகங்கள் விநியோகம் மற்றும் பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

அருள்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதி சீட்டு வழங்குமிடம், மருத்துவா் அறை, புறநோயாளி பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, மருந்தகம், ஆய்வகம் ஆகியவற்றை பாா்வையிட்டு, மருத்துவா்களிடம் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருந்துகள் இருப்பு குறித்தும் கேட்டறியப்பட்டது என்றாா்.

இந்த ஆய்வின்போது உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சதீஷ்குமாா், உதவி திட்ட அலுவலா் (உள்கட்டமைப்பு-2) சரவணன், வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுடா்விழி, பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ், அனுராதா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.