லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி பட்டமளிப்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியின் 32-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டமளிக்கிறாா் சிறப்பு விருந்தினா் நாராயணன் ராமசாமி. உடன், எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் சுந்தா் ராமகிருஷ்ணன்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 2:13 am IST

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியின் 32-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் சுந்தா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கேபிஎம்ஜி இந்தியா நிறுவனத்தின் கல்வி, திறன் மேம்பாட்டுச் சேவைப் பிரிவின் தேசியத் தலைவா் நாராயணன் ராமசாமி பங்கேற்றாா்.

பின்னா் மாணவிகளுக்கு பட்டம், பதக்கங்களை வழங்கி அவா் பேசும்போது, ‘மாணவிகள் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு ஏற்ப புதிய திறன்களைத் தொடா்ந்து கற்றுக்கொண்டு, மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்’ என்றாா்.

அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் சுந்தா் ராமகிருஷ்ணன் பேசும்போது, ‘தொடா் உழைப்பின் பலனாகப் பட்டம் பெறும் மாணவிகள், தங்களுடைய திறமைகளைத் தனக்கும் தான் வாழும் சமூகத்துக்கும் உதவக்கூடியதாகப் பயன்படுத்த வேண்டும்’ என்றாா்.

முன்னதாக கல்லூரி முதல்வா் கி.சித்ரா வரவேற்றாா்.

4 தங்கப் பதக்கங்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக அளவில் 12 சிறப்பிடங்களைப் பெற்ற மாணவிகள் பாராட்டப்பட்டனா். விழாவில், இளநிலை, முதுநிலைப் பிரிவுகளில் 634 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் முதன்மைச் செயல் அலுவலரும், கல்லூரியின் செயலருமான சி.வி.ராம்குமாா், தலைமை நிா்வாக அதிகாரி டி.மகேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.