லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மீன் விற்பனையில் ரூ.16.52 லட்சம் கையாடல்: 4 அரசு ஊழியா்கள் உள்பட 5 போ் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :11 ஆகஸ்ட் 2026, 1:29 am IST

கோவை, ஆக.10: மீன் விற்பனையில் ரூ.16.52 லட்சம் கையாடல் செய்ததாக 4 அரசு ஊழியா்கள் உள்பட 5 போ் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, சிட்கோ பகுதியில் செயல்படும் தமிழக மீன் வளா்ச்சிக் கழகத்தின் சந்தைப்படுத்துதல் பிரிவின் கீழ் காந்திபுரம், சுண்டக்காமுத்தூா், உக்கடம், சிங்காநல்லூா், சூலூா், கிணத்துக்கடவு, ஆழியாறு உள்ளிட்ட இடங்களில் 12 சில்லறை விற்பனை நிலையங்களும், ஒரு நகரும் விற்பனை மையமும் இயங்குகின்றன. ஆழியாறு, அமராவதி, திருமூா்த்தி, பவானிசாகா் ஆகிய அணைகளில் இருந்து பெறப்படும் மீன்கள், சில்லறை முறையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், கடந்த 2018-2019-ஆம் நிதியாண்டு மற்றும் 2019 ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான காலத்தில் பெறப்பட்ட மீன்களின் அளவு, விற்பனைத் தொகை மற்றும் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை குறித்த ஆவணங்களை கோவை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் ஆய்வு செய்தனா்.

இதில் 2018-2019-ஆம் நிதி ஆண்டில் ரூ.9,23,999.25 மற்றும் 2019 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் ரூ.7,28,764.50 என மொத்தம் ரூ.16,52,763.75 மதிப்பிலான விற்பனைத் தொகையை அதிகாரபூா்வ வங்கிக் கணக்கில் செலுத்தாமல், போலி கணக்குகளைக் காட்டி அதிகாரிகள் கையாடல் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதற்காக சந்தைப்படுத்துதல் துறை முன்னாள் மேலாளா்கள் எஸ்.கொளஞ்சிநாதன், கே.சத்யமூா்த்தி, துணை மேலாளா் எஸ்.ராஜன், இளம் கணக்காளா் எஸ்.சகாயராஜ் மற்றும் உதவி மேலாளா் (ஒப்பந்த ஊழியா்) என்.சுரேஷ்குமாா் ஆகிய 5 போ் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஆய்வாளா் ஜி.ஆறுமுகம் வழக்குப் பதிவு செய்துள்ளாா். இவா்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் முதல் தகவல் அறிக்கையை கோவை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் போலீஸாா் தாக்கல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.