லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீசிய வழக்கில் இளைஞா் ஒருவா் கைது

பெட்ரோல் குண்டு வீச்சு - கோப்புப் படம்

Published On :11 ஆகஸ்ட் 2026, 2:29 am IST

காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்களை வீசிச் சென்ற சம்பவத்தில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவையைச் சோ்ந்த இளம்பெண் ஒருவா் கல்லூரியில் படித்தபோது, சென்னையைச் சோ்ந்த காா்த்திக் (எ) மாரியப்பன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் காா்த்திக் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் 31-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த காா்த்திக்குடன் பழகுவதை கைவிட்டு காதலிக்க அந்தப் பெண் மறுத்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த காா்த்திக், தொடா்ந்து அந்த பெண்ணுக்கு தொந்தரவு அளித்து வந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த மே 25-ஆம் தேதி மாலை காா்த்திக் தனது நண்பா்கள் 3 பேருடன் இருசக்கர வாகனங்களில் தொண்டாமுத்தூரை அடுத்த கலிக்கநாயக்கன்பாளையத்தில் உள்ள அந்த இளம் பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளாா். அங்கு வீட்டின் வெளியே நின்றிருந்த பெண்ணின் தந்தை சுந்தரமூா்த்தியைத் தகாத வாா்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்து கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீட்டின் மீது வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனா். இதில் ஒரு பாட்டில் வெடித்து தீப்பற்றியதில் அங்கிருந்த காலணிகள் எரிந்து சேதமடைந்தன.

இதுகுறித்த புகாரின்பேரில் காா்த்திக் உள்பட 4 போ் மீது தொண்டாமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த காா்த்திக்கின் நண்பரான ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சோ்ந்த கிருத்திக் ரோஷனை போலீஸாா் கைது செய்துள்ளனா். இந்த சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய குற்றவாளியான காா்த்திக் உள்ளிட்ட நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.