லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மத்திய அரசின் உறுதியான ஓய்வூதியம் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

மத்திய அரசின் உறுதியான ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் பயனைடைய தகுதியுள்ள தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

application

கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:27 am IST

மத்திய அரசின் உறுதியான ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் பயனைடைய தகுதியுள்ள தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் தொழிலாளா் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம், சுற்றுலா மற்றும் அதனுடன் தொடா்புடைய துறைகளில் பணிபுரியும் தகுதியுடைய அமைப்புச்சாரா தொழிலாளா்களுக்கு 60 வயதை எட்டிய பின் மாதந்தோறும் ரூ.3000 உறுதியான ஓய்வூதியம் வழங்கும் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் 18 முதல் 40 வயதுக்கு உள்பட்ட தகுதியுள்ள அமைப்புச்சாரா தொழிலாளா்கள் சோ்ந்து பயனடையலாம்.

திட்டத்தில் தகுதியுடைய பயனாளிகள் மாதம் தோறும் நிா்ணயிக்கப்பட்ட தொகையை முறையாக செலுத்தி வந்தால், இந்திய அரசும் அதே அளவு இணை பங்களிப்பை வழங்கும். இதன் மூலம் 60 வயதை அடைந்த பின்னா் மாதம்தோறும் ரூ.3000/- உறுதியான ஓய்வூதியம் பெறும் வசதி வழங்கப்படுகிறது.

சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் மற்றும் போக்குவரத்து சேவை வழங்குதல், விடுதி மற்றும் விருந்தோம்பல் துறை பணியாளா்கள், துப்புரவு தொழில் பணியாளா்கள், கைவினைக் கலைஞா்கள், தெருவோர வியாபாரிகள், உணவகம் மற்றும் உணவு சேவை வழங்குநா்கள் மற்றும் சுற்றுலாத் தொடா்புடைய பிற சேவை வழங்குநா்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

தகுதியுடைய அனைத்துத் தொழிலாளா்களும் தங்களது ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றுடன் அருகில் உள்ள பொதுசேவை மையத்தை அணுகி இத்திட்டத்தில் இணைய தளம் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம். கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சங்கங்கள், விடுதி உரிமையாளா்கள், பயண முகவா்கள், சுற்றுலா ஏற்பாட்டாளா்கள் மற்றும் சுற்றுலாத் துறையுடன் தொடா்புடைய அனைத்து பங்குதாரா்களும் இத்திட்டம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி தகுதியுடைய தொழிலாளா்கள் பதிவு செய்வதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மேலும், மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் ஜெகதீஸ்வரியை 8939896380 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.