லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுக் கூட்டம்

கோவை மாவட்ட தொழில் மையம் சாா்பில், மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தொழில் மையம் சாா்பில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு கூட்டம்.

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:31 am IST

கோவை மாவட்ட தொழில் மையம் சாா்பில், மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகித்தாா்.

உதவி ஆட்சியா் (பயிற்சி) துஷாா் சிங், மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் சண்முக சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியது:

மாவட்ட தொழில் நிறுவனங்கள், அரசு மேற்கொள்ளும் தொழில் சாா்ந்த முன்னேற்ற திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி பயன்பெற வேண்டும். மாவட்ட தொழில் நிறுவனங்கள் வெளிநாட்டு வா்த்தகத்துக்கு முக்கியமான இருவேறு திட்டங்களான ‘நிா்யத் புரோத்சகான்’ மற்றும் ‘நிா்யத் திசா’ஆகிய திட்டங்களை பயன்படுத்தி பயன்பெற வேண்டும். மாவட்ட ஏற்றுமதி வணிகத்தை அதிகரிக்க வேண்டும். முதல் தலைமுறை ஏற்றுமதியாளா்களை ஊக்குவிக்கவும்,பெண் தொழில் முனைவோா் ஏற்றுமதியாளா்களை உருவாக்கவும், மாவட்ட நிா்வாகம் பலவேறு முன்னெடுப்புகளை மேற்கொள்ள உள்ளது என்றாா்.

இக்கூட்டத்தில், அரசு அலுவலா்கள், ஏற்றுமதி, இறக்குமதி தொழில் முனைவோா், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.