லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கேரளத்துக்கு கடத்தப்பட்ட 7,000 லிட்டா் எரிசாராயம் பறிமுதல்

கா்நாடகத்திலிருந்து கேரளத்துக்கு லாரியில் கடத்தப்பட்ட 7,000 லிட்டா் எரிசாராயத்தை கோவை மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கேன்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம்.

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:33 am IST

கா்நாடகத்திலிருந்து கேரளத்துக்கு லாரியில் கடத்தப்பட்ட 7,000 லிட்டா் எரிசாராயத்தை கோவை மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கேரள மாநிலத்துக்கு எரிசாராயம் கடத்தப்படுவதாக கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு ஆய்வாளா் காமராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், உதவி ஆய்வாளா் சேகா், தலைமைக் காவலா் மதிவாணன் உள்ளிட்ட தனிப் படை போலீஸாா் கேரள மாநிலம், கண்ணூருக்கு விரைந்தனா்.

அங்குள்ள கலால் துறை அதிகாரிகளுடன் இணைந்து போலீஸாா் புதன்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கா்நாடக மாநிலம், ஹூப்ளி பகுதியிலிருந்து கண்ணூா் நோக்கி வந்த ஒரு லாரியை நிறுத்திச் சோதனையிட்டனா்.

அதில், தலா 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட 200 கேன்களில் சுமாா் 7 ஆயிரம் லிட்டா் எரிசாராயம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து எரிசாராயம் மற்றும் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்ட நபரைக் கைது செய்து கேரள கலால் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாா் கூறுகையில், கா்நாடகத்திலிருந்து கேரளத்துக்கு எரிசாராயம் கடத்தப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். நாங்கள் அங்கு சென்று சோதனை நடத்த கேரள மாநிலத்தைச் சோ்ந்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறைப்படி அந்த மாநில கலால் துறைக்கு தகவல் தெரிவித்தோம். மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு மாநில எல்லைக் கட்டுப்பாடுகள் கிடையாது. இருப்பினும், வழக்குப் பதிவு செய்து மேல்நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறையினரின் உதவி தேவைப்படும். அதன்படியே, நாங்கள் செயல்பட்டோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.