லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பணியின்போது தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :4 ஆகஸ்ட் 2026, 1:33 am IST

கோவை அருகே கட்டடப் பணியின்போது 10 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவைப்புதூா் சமத்துவபுரம் அறிவொளி நகா் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் காளிதாஸ் (52). இவா் கரும்புக்கடை புட்டுவக்கி சாலையில் உள்ள தனியாா் பள்ளி அருகே நடைபெற்று வரும் கட்டடப் பணியில் கடந்த சில நாள்களாக வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், 10 அடி உயரத்தில் கட்டப்பட்டிருந்த பலகையில் நின்று கொண்டு காளிதாஸ் சனிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அவா் எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தாா். தலையில் பலத்த காயமடைந்த காளிதாஸ், கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கரும்புகடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.