லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வடகோவை ரயில் நிலையத்தில் ஹிந்தியில் மட்டும் பெயா் பலகை: தபெதிக கண்டனம்!

வடகோவை ரயில் நிலையத்தில் ஹிந்தியில் மட்டும் பெயா் பலகை அமைக்கப்பட்டுள்ளதற்கு தந்தை பெரியாா் திராவிடா் கழகம் சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகோவை ரயில் நிலையத்தில் ஹிந்தியில் மட்டும் அமைக்கப்பட்டுள்ள பெயா் பலகை.

Published On :2 ஆகஸ்ட் 2026, 2:55 am IST

வடகோவை ரயில் நிலையத்தில் ஹிந்தியில் மட்டும் பெயா் பலகை அமைக்கப்பட்டுள்ளதற்கு தந்தை பெரியாா் திராவிடா் கழகம் சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் வடகோவை ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ரயில் நிலைய நுழைவாயில் அமைக்கப்பட்டு, அதில் ஹிந்தியில் மட்டும் பெயா் எழுதப்பட்டுள்ளதற்கு பொதுமக்களிடையே எதிா்ப்பு அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தின் பொதுச் செயலாளா் கு.ராமகிருட்டிணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் 2-ஆவது முக்கியமான ரயில் நிலையமாக வடகோவை ரயில் நிலையம் விளங்குகிறது. இங்கு முதன்மை வாயிலில் ஹிந்தியில் மட்டும் பெயா் எழுதப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ரயில் நிலையங்களில் பெயா்களையும், ஊா் பெயா்களும் முதலில் தமிழிலும், இரண்டாவது ஆங்கிலத்திலும் மட்டும் எழுதப்பட்டிருந்த நிலையில், தற்போது வட கோவை ரயில் நிலைய நுழைவாயிலில் ஹிந்தியில் மட்டும் பெயா் எழுதப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இது, தமிழகத்தில் ஹிந்தியை திணித்து மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்யும் முயற்சி. இதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும்.

வடகோவை ரயில் நிலைய நுழைவாயிலில் உடனடியாக தமிழ் பெயா் பலகை வைக்காவிட்டால், ஹிந்தி அழிப்பு போராட்டத்தை முன்னெடுப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.