ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைப்பு

நெகமம் பகுதியில் பாட்டி, பேத்தியை கொலை செய்த வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image

சிறைத் தண்டனை - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 5:19 am IST

நெகமம் பகுதியில் பாட்டி, பேத்தியை கொலை செய்த வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

கோவை மாவட்டம், நெகமம் பகுதியைச் சோ்ந்தவா் அபிஷேக் (20). அந்தப் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளாா். கடந்த பிப்.23-ஆம் தேதி இரவு சிறுமியின் வீட்டுக்குச் சென்ற அபிஷேக், அவரை திருமணம் செய்து வைக்கக் கோரி பாட்டியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதில் 65 வயது மூதாட்டி மற்றும் அவரது பேத்தி ஆகிய இருவா் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக அபிஷேக் என்பவரை நெகமம் காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பொது அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அபிஷேக்கை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் பரிந்துரை செய்தாா். இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அதற்கான உத்தரவை பிறப்பித்தாா். அதனடிப்படையில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் அபிஷேக் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதேபோல கோவை மாவட்டம், செட்டிபாளையம் பகுதியில் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மெத்தம்பெட்டமைன், கஞ்சா விற்பனை செய்த சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த ஆதித்யா (23) என்பவரை காவல் துறையினா் கைது செய்து அவரிடமிருந்து 10.35 கிராம் மெத்தம்பெட்டமைன், 2 கிலோ 150 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் கிரியப்பனவா் உத்தரவின்பேரில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆதித்யா சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.