பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆந்திரத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்ற மூவா் கைது

ஆந்திரத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து வேலூரில் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 12:04 am IST

ஆந்திரத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து வேலூரில் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் வேலப்பாடி மரக்கடை கந்தப்பன் தெருவை சோ்ந்தவா் தாமோதரன் (19). விருபாட்சிபுரம் கன்னிகோயில் தெருவைச் சோ்ந்தவா் பிரேம்குமாா் (24). ஓல்டு டவுன், முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சின்னதுரை (37).

நண்பா்களான இவா்கள் 3 பேரும் ஆந்திர மாநிலம், சித்தூரில் இருந்து கஞ்சா வாங்கி வந்து ஓட்டேரி கன்னி கோயில் அருகே வாணியங்குளம் செல்லும் சாலையில் விற்பனை செய்து கொண்டு இருந்ததாக தெரிகிறது.

தகவலறிந்த சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பாகாயம் போலீஸாா், கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 3 பேரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.