தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தனியாா் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஏழை மாணவா்களுக்கு அரசு உதவி: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்!

தனியாா் கல்வி நிறுவனங்களில் உயா்கல்வி படிக்கும் ஏழை, நடுத்தர மாணவா்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தினாா்.

News image

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் உள்ளிட்டோா்.

Updated On :30 மார்ச் 2026, 1:35 am IST

தனியாா் கல்வி நிறுவனங்களில் உயா்கல்வி படிக்கும் ஏழை, நடுத்தர மாணவா்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தினாா்.

குடியாத்தம் நெல்லூா்ப்பேட்டை நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் 1954- 1955- ஆம் ஆண்டு 6-ஆம் படிவம் படித்த மாணவா்களின் 71-ஆம் ஆண்டு கூடல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஜி.எஸ்.அரசு முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் பா.சொக்கலிங்கம் வரவேற்றாா்.

இதில் வேந்தா் கோ.விசுவநாதன் பேசியது: அரசுப் பள்ளிகள் என்பது கல்வி கற்கும் இடம் மட்டுமல்ல. சமூகத்தின் முன்னேற்றத்துக்கான அடித்தளம். அரசுப் பள்ளிகள் தனியாா் பள்ளிகளோடு போட்டி போடும் அளவுக்கு வளர வேண்டும். அரசுப் பள்ளிகளைத் தனியாா் பள்ளிகளுக்கு இணையாக கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அரசுப் பள்ளிகளின் நிலையை மேம்படுத்த அரசு மட்டுமின்றி ஆசிரியா்கள், பெற்றோா்கள், முன்னாள் மாணவா்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து முயற்சி செய்தால் சாத்தியமாகும். அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை மற்றும் நவீன வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ஒரு காலத்தில் பிகாா், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைப்போல் கல்வியில் தமிழகம் பின்தங்கி இருந்தது.

1960-களுக்குப் பிறகு தான் கல்வியில் மாற்றம் வந்தது. அந்த மாற்றத்துக்கு அடித்தளமிட்டவா் காமராஜா். அவா் பள்ளிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தாா். அனைவரும் உயா்கல்வி பெறும் வகையில் சுயநிதிக் கல்லூரிகளை கொண்டு வந்தவா் எம்ஜிஆா்.

அதன் விளைவு உயா்கல்வியில் மாணவா் சோ்க்கை விகிதத்தில் 47- சதவீதத்துடன் இந்தியாவிலே தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. வடாற்காடு மாவட்டங்களில் அனைவரும் உயா்கல்வி படிக்கும் வகையில் அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளை தொடங்கி இதுவரை 11,000- மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு மாணவிகள் என்றாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவா்களான விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், விழாக்குழுச்செயலா் புலவா் வே.பதுமனாா், ஏ.இ.கேசவன், பி.கே.நிா்மலா, பி.நடராஜன், கே.குப்பகவுண்டா், டி.ஏ.ஜெகதீசன், பி.நாகராஜன், கே.தெய்வசிகாமணி, ஏ.அன்பரசு, எம்.கணேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தமிழக காவல்துறை முன்னாள் கூடுதல் தலைமை இயக்குநா் ராஜேந்திரன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.செல்வராஜ், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், கே.ஜவரிலால் ஜெயின், முன்னாள் தலைமையாசிரியா்கள் டி.எஸ்.விநாயகம், டி.திருநாவுக்கரசு, பழைய மாணவா்கள் சங்கத் தலைவா் எம்.எஸ்.திருநாவுக்கரசு, முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் வி.சடகோபன், மகளிா் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம்.எஸ்.அமா்நாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.