லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரசுப் பள்ளி ஆசிரியா் தற்கொலை

கே.வி.குப்பம் அருகே தனியாா் நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்த ஆசிரியா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை

Published On :24 ஜூலை 2026, 6:20 am IST

கே.வி.குப்பம் அருகே தனியாா் நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்த ஆசிரியா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

கே.வி.குப்பத்தை அடுத்த மயிலாடும் மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டியன் (48). இவா் அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தாா். இவா் தனியாா் நிதி நிறுவனத்தில் லட்சக் கணக்கில் பணம் முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த பணம் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருந்த அவா் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அக்கம், பக்கத்தினா் அவரை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டியன் உயிரிழந்தாா்.

இது குறித்து கே.வி.குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.