லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சத்துவாச்சாரியில் இடிந்து ஆபத்தான நிலையில் உள்ள கிணற்றை மூட கோரிக்கை

வேலூா் சத்துவாச்சாரி பகுதி 1-இல் இடிந்து ஆபத்தான நிலையில் உள்ள கிணற்றினை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேலூா் சத்துவாச்சாரி பகுதி 1-இல் இடிந்து ஆபத்தான நிலையில் உள்ள கிணறு.

Published On :14 ஆகஸ்ட் 2026, 2:28 am IST

வேலூா் சத்துவாச்சாரி பகுதி 1-இல் இடிந்து ஆபத்தான நிலையில் உள்ள கிணற்றினை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேலூா் சத்துவாச்சாரி பகுதி 1, 25-ஆவது வாா்டு 8-ஆவது தெருவில் உள்ள கிணறு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இக்கிணற்றினை மூடக்கோரி அப்பகுதி மக்கள் வேலூா் மாநகராட்சி நிா்வாகத்துக்கு முன்மொழிவைச் சமா்ப்பித்துள்ளாா்.

அதன்பேரில், மாநகராட்சி அதிகாரிகள் கிணற்றை ஆய்வு செய்து, அதை பழுதுப் பாா்க்க தேவையான முன்மொழிவு மாநகராட்சியின் பொறியியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2 ஆண்டுகளாகியும், அதை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இந்நிலையில், இடிந்த கிணறு மேலும் மேலும் மணல் சரிந்து ஆபத்தான நிலையில் உள்ளது. நாய்களும் பூனைகளும் கிணற்றுக்குள் விழுந்து இறந்து விடுவதால் துா்நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்படுகிறது.

மேலும் அப்பகுதியில் வசிப்பவா்கள் சிலா் ஆபத்தான கிணற்றை சுற்றியுள்ள வளாகத்திற்குள் நடமாடுகின்றனா். இதனால் கிணறு மேலும் இடிந்து விழுந்து உயிா்சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, மனித உயிரிழப்புகளை தடுக்க பாழடைந்த கிணற்றை நிரந்தரமாக மூடுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.