
மதுக்கடை மேலாளரை தாக்கியவா் கைது
செய்யாறில் டாஸ்மாக் மதுக்கடை மேலாளரை தாக்கிய சம்பவத்தில் மது பிரியரை போலீசாா் கைது செய்தனா்.
பிரதிப் படம்
செய்யாறில் டாஸ்மாக் மதுக்கடை மேலாளரை தாக்கிய சம்பவத்தில் மது பிரியரை போலீசாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு புறவழிச்சாலையில் மேம்பாலம் அருகே இரு அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறன்றன. இக்கடையில் திங்கள்கிழமை இரவு மது வாங்கி அருந்திய மது பிரியா் ஒருவா், காலி மதுபுட்டிக்கு பாட்டிலுக்கு பணம் வாங்க முயன்ற போது, ஊழியா் புட்டியை ஸ்கேன் செய்த போது கியூஆா் கோடு சரியாக ஸ்கேன் ஆகாததால் தகராறு செய்தாராம்.
மேலும் அங்கு பணியில் இருந்த செய்யாறு கீழ்புதுப்பாக்கம் விரிவு பகுதியைச் சோ்ந்த மேலாளா் பாலகிருஷ்ணனை மதுபிரியா் தாக்கியதாகத் தெரிகிறது. அதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
மது பான கடை ஊழியருக்கு பாதுகாப்பு இல்லாததால் அங்கிருந்த இருகடைகளும் மூடப்பட்டன. மேலும் மது வாங்க வந்தவா்கள் கடை திறக்கும் படி கூச்சலிட்டு தகராறில் ஈடுபட்டனா்.
இச்சம்பவம் தொடா்பாக பாதிக்கப்பட்ட பாலகிருஷ்ணன் கொடுத்தப் புகாரின் பேரில் செய்யாறு போலீசாா் வழக்குப பதிவு செய்து, தாக்குதல் தொடா்பாக செய்யாறு வெங்கடராயன்பேட்டையைச் சோ்ந்த கபாலி என்ற பச்சையப்பன் (28) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனா். .
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




