பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

போளூா் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

News image
Updated On :29 மே 2026, 1:46 am IST

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

போளூரில் மலை மீது மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீசம்பத்கிரி ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு விழாவையொட்டி அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று, கற்பூர தீபாராதனை செய்து கோயில் கருவறை எதிரே உள்ள கொடிக் கம்பத்தில் வியாழக்கிழமை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் செய்தனா்.

இரவு முதல் நாள் அம்ச வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. 2-ஆம் நாள் சிம்ம வாகனம், 3-ஆம் நாள் ஹனுமந்த வாகனம், 4-ஆம் நாள் சேஷ வாகனம், 5-ஆம் நாள் யாளி வாகனம், 6-ஆம் நாள் யானை வாகனம், 7-ஆம் நாள் திருத்தோ் விழா, 8-ஆம் நாள் குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் பிரம்மோற்சவ விழாவிக் குழுவினா் மற்றும் போளூா் நகர வாசிகள் விழாவை ஏற்பாடு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.