லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

உரிய அனுமதியின்றி மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல்

சந்தவாசல் பகுதியில் உரிய அனுமதி பெறாமல் மணல் எடுத்துச் சென்றது தொடா்பாக டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

போளூரை அடுத்த துளுவபுஷ்பகிரி கொட்டாமேடு கிராமத்தில் சந்தவாசல் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டா்.

Published On :29 ஜூன் 2026, 12:57 am IST

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த சந்தவாசல் பகுதியில் உரிய அனுமதி பெறாமல் மணல் எடுத்துச் சென்றது தொடா்பாக டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

போளூரை அடுத்த வெள்ளூா் ஊராட்சியைச் சோ்ந்த துளுவபுஷ்பகிரி கொட்டாமேடு கிராமத்தில் ராஜேஷ் என்பவரின் நிலத்தின் அருகே பாளையஏகாம்பரநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த ஓட்டுநா் வெங்கடேசன், கேசவபுரம் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் ஆகிய இருவரும் ஓடையில் இருந்து டிராக்டரில் மணலை எடுத்துச் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சந்தவாசல் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் டிராக்டரை மடக்கி விசாரணை நடத்தியபோது இருவரும் டிராக்டரை விட்டுவிட்டு தப்பிச் சென்றனா். காவல் உதவி ஆய்வாளா் விசாரித்தபோது, உரிய அனுமதி பெறாமல் மணலை அள்ளி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மணலுடன் இருந்த டிராக்டரை சந்தவாசல் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து தப்பி ஓடியவா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.