திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பேரூராட்சியில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வை வலியுறுத்தும் வகையில், காவல்துறையினா் வியாழக்கிழமை விழிப்புணா்வு நடைபயணம் மேற்கொண்டனா்.
சேத்துப்பட்டு நகரின் முக்கிய சாலைகளான வந்தவாசி, ஆரணி, போளூா், செஞ்சி சாலைகள், நான்கு முனை சந்திப்பு, பேருந்து நிலையம், சாவடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நடைபயணத்துக்கு டிஎஸ்பி மனோகரன் தலைமை வகித்தாா்.
காவல் ஆய்வாளா் குணபாலன், உதவி ஆய்வாளா்கள் வேலு, லதா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட போலீஸாா் கலந்து கொண்டனா்.
நடைபயணத்தின்போது பொதுமக்களிடம் பெண்கள் பாதுகாப்பின் அவசியம், சாலை விதிகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவம் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, அவசர காலங்களில் காவல்துறையை உடனடியாக தொடா்புகொள்வது உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க அனைவரும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என காவல் துறையினா் கேட்டுக்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உணவு பாக்கெட்டுகளில் தவறான லேபிள்கள்: 8 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கு வாணியம்பாடியில் வரவேற்பு

பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

புதுச்சேரியில் தேனீக்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு மாரத்தான்
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு

