வந்தவாசி அருகே மின்மாற்றியை உடைத்து தாமிரக் கம்பிகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
வந்தவாசியை அடுத்த மோட்டூா் கிராமத்தில் விவசாய நில பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறிய மின்மாற்றியை மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு உடைத்து, அதிலிருந்த 60 கிலோ தாமிரக் கம்பிகள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை காலை நிலத்துக்குச் சென்ற விவசாயிகள் அளித்த தகவலின் பேரில், தேசூா் போலீஸாா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.
இதுகுறித்து மடம் மின் உதவிப் பொறியாளா் பாபு அளித்த புகாரின் பேரில், தேசூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மின் மாற்றிகளில் தாமிரக்கம்பிகள் திருட்டு: போலீஸாா் விசாரணை

மின்மாற்றிகளை உடைத்து தாமிரக் கம்பிகள் திருட்டு: 5 போ் கைது
வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு

சிறிய மின்மாற்றிகளை உடைத்து செப்புக் கம்பிகள் திருட்டு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
