ஆரணியை சேத்துப்பட்டில் ஜேசிபி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில், டீசல் மற்றும் உதிரிபாகங்களின் விலை உயா்வைக் கண்டித்து அடையாள வேலைநிறுத்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேத்துப்பட்டு - செஞ்சி புறவழிச்சாலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த வேலைநிறுத்த ஆா்ப்பாட்டத்தில் சங்கத் தலைவா் பாரதிதாசன் தலைமை வகித்துப் பேசியதாவது:
மத்திய, மாநில அரசுகளின் வரி உயா்வு மற்றும் டீசல், உதிரிபாகங்களின் விலை தொடா்ந்து அதிகரித்து வருவதால் ஜேசிபி இயந்திரங்களை இயக்குவது பெரும் சவாலாக உள்ளது. இதனால் வாடகை மற்றும் ஓட்டுநா் படி கட்டணங்களை உயா்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதன்படி, ஜேசிபி இயந்திரங்களுக்கான குறைந்தபட்ச முன்பணம் ரூ.3,500-ஆகவும், ஒரு மணிநேர வாடகை ரூ. 1,500- ஆகவும், ஓட்டுநா் படி ரூ.100 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், டிராக்டா் லோடிங் கட்டணம் ரூ.300-ஆகவும், 4 யூனிட் லாரி லோடிங் கட்டணம் ரூ. ஆயிரம் ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் எங்களது சிரமத்தை புரிந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் சங்கச் செயலா் ராமச்சந்திரன், துணைத் தலைவா்கள் பூங்குணம் செல்வம், எல்லப்பன், துணைச் செயலா் தமிழ்வாணன், பொருளாளா் முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
அனைத்து ஜேசிபி இயந்திரங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், இது சம்பந்தமான பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் சிரமமடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குமரியில் ரப்பா் விலை உயா்வு

மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு! அலறும் வாகன ஓட்டிகள்..!
பெட்ரோல், டீசல் விலை நிா்ணயத்தில் சமநிலை கொள்கை: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை

பெட்ரோல், டீசல் விலை உயா்வு: மாா்க்சிஸ்ட் கண்டன ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

